தமிழக ரயில் பாதைகள்

வணக்கம்! நாம் தமிழ்நாட்டின்  ரயில்வே பற்றி பேசவேண்டுமெனில் முதலில் முக்கியமான நான்கு வழிகளைப் பற்றி பேசுவோம். அதில், முதலாவது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான முதன்மை தடம்: இரண்டாவது சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தடம்; மூன்றாவது விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி அடையும் தடம்; மேற்கண்ட தடங்கள்  மட்டுமல்லாமல் கேரளாவுக்கு செல்லும் மூன்று வழித்தடங்கள்: பெங்களூர் தடத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து பிரிந்து ஈரோடு, கோவை, பாலக்காடு வழியாக செல்லும் தடம்; இரண்டாவதாக, திருநெல்வேலியில் இருந்து கொல்லம் செல்லும் தடம்; மூன்றாவதாக, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தடம். 

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் செல்வதற்கு நாம் இரண்டு வழித்தடங்களை பயன்படுத்துகிறோம். முதலாவது விஜயவாடா தடம்; இரண்டாவது ரேணுகுண்டா தடம். இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பிற தடங்கள். ஒன்று, நாகப்பட்டினம் முதல் திருச்சி வரை, இரண்டு சேலம் முதல் கடலூர் தடம்; மூன்று, மதுரை முதல் இராமேஸ்வரம்; நான்கு, வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரை,  5.திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரையிலான தடம்.  நான் சொன்ன இந்த வழித்தடங்கள் அனைத்தும் இப்பொழுது இருக்கின்ற மக்கள் தொகைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமாக தெரியலாம். ஆனால், ரயில்வேயின் ஆரம்ப காலங்களில் எந்தெந்த வழித்தடங்கள் முக்கியமாக இருந்தது என்பதை காணொளியின் வழியாக நாம் விரிவாக பார்க்கலாம்.

முதன் முதலாக 1845 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே நிறுவனம் என்பது ஆரம்பிக்கப்பட்டது. 

google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0

இது 1853 ஆம் ஆண்டு ராயபுரத்தில் தலைமையகமாகக்  கொண்டு 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையானது சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டை வரை இயக்கப்பட்டது. மேலும் இந்த பாதை, ஆற்காடு வரை நீட்டிக்கப்பட்டது. ஏன் இந்த திட்டம், சென்னையிலிருந்து வாலாஜாபேட்டைவரை போடப்பட்டது?. ஆற்காடு என்பது அப்பொழுதிருந்த கர்நாடகா மாகாணத்தின் தலைநகராகும். அதனால் சென்னையிலிருந்து, வியாபார பொருட்களை சேமித்து வைக்கவும், ராணுவ தளவாடங்களை பெங்களூருக்கு கொண்டு செல்லவும் இந்த பாதை போடப்பட்டது.

12.5.1862இல் சங்ககிரியில் இருந்து ஈரோடு வழியாக  போத்தனூருக்கு, அதாவது பழைய கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு பாதை திறக்கப்பட்டது.

1.2.1864 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் விரைவு ரயிலான “ப்ளூ மௌண்டைன் எக்ஸ்பிரஸ்” போத்தனூரில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட்டது.

இந்த செய்தியோடு நீங்கள் ஒரு ஆச்சரியமான தகவலை தெரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் போத்தனூரில் இருந்து சங்ககிரிக்கு 1862 இல் பாதை திறக்கப்பட்டது. நீங்கள் சங்ககிரியில் இருந்து வாலாஜாபேட்டை வரை இருக்கக்கூடிய தூரத்தின் அளவு ஏறக்குறைய 270 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த 270 கிலோ மீட்டர்  பாதை கட்டி முடிக்க,  அப்போது இருந்த ஆங்கில அரசு வெறுமனே இரண்டு ஆண்டுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் வாலாஜாபேட்டை முதல் ஜோலார்பேட்டை வரையிலான பாதை கட்டமைப்பு குறித்த எந்த ஒரு வரலாற்று தகவலும் இடம்பெறவில்லை. இதனை மிகவும் ஆழமாக தேடினாலும் இரண்டு விதமான தகவல்கள் கிடைக்கின்றன; சங்ககிரி முதல் ஜோலார்பேட்டை வரையில் ஒரு தடம் அமைக்கப்பட்டது. மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து வாலாஜா பேட்டை வரையிலும் இன்னொரு தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆங்கிலேய அரசு தனது படைகளை ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த இருப்புப் பாதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக அவர்கள் வாலாஜாபேட்டை வரை என்பதே, அதற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு என்ற  ஒரு போர் நடைபெற்ற இடத்திற்கு தனது படைகளை விரைவாக கொண்டு செல்லவே இந்த பாதை முதலில் போடப்பட்டது. பின்னர் மேற்கு புறத்தில் இருக்கக்கூடிய சங்ககிரி எனும் இடத்தில் அமைந்திருக்கக் கூடிய அந்த கோட்டைக்காக வாலாஜாபேட்டையில் இருந்து ஜோலார்பேட்டை பேட்டை வழியாக இருப்புப் பாதை மிக விரைவாக இரண்டு வருடங்களில் போடப்படுகிறது. மேலும் 1864 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பெங்களூர் கண்டோன்மெண்ட், அதாவது பெங்களூரில் ராணுவத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பகுதி; அந்தப் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை; அதாவது பழைய மெட்ராஸ் மாகாணத்தை இணைக்கும் விதமாக கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை, ரயில் பாதையின் மூலமாக இணைத்திருக்கிறார்கள். இதுதான், கோயம்புத்தூருக்கும், பெங்களூருக்கும் ரயில் தடம் அமைக்கப்பட்டதற்கான காரணமும்; வரலாறும். 

இந்த இரண்டு ரயில் பாதைகளை தவிர்த்து, மிக முக்கியமான ரயில் பாதையான சென்னை எக்மோர் முதல் கன்னியாகுமரி வரை பாதை எப்படி போடப்பட்டது என்பதை பார்ப்போம். 

1/9/1876ல்  சென்னை பூங்கா ரயில் நிலையம் முதல் திண்டிவனம் வரை ரயில் பாதை திறக்கப்பட்டது. மேலும், 01/01/1877ல், திண்டிவனம் முதல் கடலூர் வரை விழுப்புரம் வழியாக பாதை திறக்கப்பட்டது. இந்த பாதையானது கடலூரிருந்து பொருட்களை சென்னைக்கு கொண்டு செல்ல பயன்பட்டது. மேலும் இந்த பாதையானது, சென்னையில் பூங்கா ரயில் நிலையம் முதல் சென்னை கடற்கரை வரை 01/01/1879ல் நீட்டிக்கப்பட்டது. இப்பொழுது விழுப்புரம் முக்கியமான இணைப்பு நிலையமாக அதாவது ஜங்ஷன் ஆக மாறிவிட்டது. இதனால், ஒருபுறம் விழுப்புரத்திலிருந்து, பாண்டிச்சேரி வரையிலும் மறுபுறம் காட்பாடி வரை திருவண்ணாமலை வழியாக பெங்களூரூ மற்றும் கோயம்பத்தூர் தடத்தை இணைத்தது. அப்பொழுது, விழுப்புரம் முதல் திருச்சி வரையிலான ரயில் பாதையானது கடலூரிருந்து பரங்கிப்பேட்டை வரையிலும், மேலும் பரங்கிப்பேட்டை முதல் சிதம்பரம் வரையிலும், சிதம்பரம் முதல் கொள்ளிடம் வரையிலும், கொள்ளிடம் முதல் சீர்காழி வரையிலும், சீர்காழி முதல் மயிலாடுதுறை வரையிலும், மயிலாடுதுறை முதல் தஞ்சாவூர் வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் 1877 முதல் 1879 வரை போடப்பட்டது. 

இந்த பாதைகள் போடுவதற்கு முன்பாகவே நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் வழியாக தஞ்சாவூருக்கும், பிறகு தஞ்சாவூரில் இருந்து திருச்சி வரை பாதையானது 1859ல் ஆரம்பித்து 1875 வரை பல்வேறு பகுதிகளாக போடப்பட்டது. இப்பொழுது திருச்சியானது இன்னொரு இணைப்பு நிலையமாக மாறியது. திருச்சியின் மேற்கு பகுதியில், கரூர் மற்றும் கொடுமுடி வழியாக ஈரோடு வரை 1866 முதல் 1868 வரை பாதை நீட்டிக்கப்பட்டது. மேலும், தெற்கு நோக்கி அதாவது மதுரை வரை 01/09/1875ல் நீட்டிக்கப்பட்டது. மேலும், மதுரையிலிருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு 01/01/1876ல் பாதை போடப்பட்டது. வாஞ்சி மணியாச்சி முதல் திருநெல்வேலிக்கும் இதே தேதியில் பாதை  திறக்கப்பட்டது. திருநெல்வேலி–நாகர்கோவில் கட்டுமானத் திட்டங்கள் 1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டன. 1981ல் இந்த வழித்தடமானது, பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னரே, கன்னியாகுமரியானது திருவனந்தபுரத்திலிருந்து, நாகர்கோயில் வழியாக போடப்பட்ட பாதையானது 15/04/1979ல் பயன்பாட்டிற்கு வந்தது. 

இப்பொழுது நீங்கள் கூர்மையாக மேலே சொன்ன தகவல்களை உற்று நோக்கினால், விழுப்புரத்திலிருந்து திருச்சி வரையிலும் இப்பொழுது இருக்கும் விருத்தாசலம் மற்றும் அரியலூர் வழியாக செல்லும் பாதை இல்லாமல் இருக்கும். ஏனெனில், அப்பொழுது இருந்த பொருளாதாரா சூழலுக்கும், மக்கள் அடர்த்திக்கும் விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சியை அடைவது மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. 19வது நூற்றாண்டில், தெற்கிலிருக்கும் மதுரையும், திருநெல்வேலியும் விரைவாக தனது படைகளையும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பொருட்களை சென்னைக்கு கொண்டு செல்லவேண்டி இருந்ததால், 1927 முதல் 1929 வரையிலும் விழுப்புரம் முதல் திருச்சி வரை விருத்தாசலம் வழியாக பாதை போடப்பட்டது. 

இந்த காணொளியில் தமிழ்நாட்டின் மிகமுக்கியமான ரயில்பாதைகளுக்கான வரலாற்றை பார்த்தோம். இந்த காணோளி உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் தமிழ் நாட்டில் உள்ள வேறு ரயில் பாதைகளுக்கான வரலாறு தெரியவேண்டுமெனில் உங்கள் விருப்பங்களை பதிவிடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *