கவிதை / POET

கள்ளக்காதல்

கள்ளக்காதல் என்பது பால்பண்ணையை நிர்வகிப்பது போல! பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பசுபோல; பணம் கொடுக்க பல ஆண்கள்; அதேவேளையில், பால் கொடுக்க தயாராகும் சினை பசுபோல இன்னும் பல சபல ஆண்கள்; ஒரு மடியில் பால் (பணம்) வற்றியவுடன் அடுத்த மடி; பால் (பணம்) வற்றிப்போனால் கசாப்புக்கடை (பிரேக்கப்) நவ நாகரீக காதல்.

கள்ளக்காதல் Read More »

அயல் மகரந்த சேர்க்கை

வரப்புகளில் நடக்கும்பொழுது; அடுத்தவன் வீட்டு இளம் முட்செடி காலை தடவுதல் இதமாகதான் இருந்தது. இன்று வளர்ந்து கண்ணை கிழிக்கும்பொழுதுதான்; மனம் உணருகிறது; முளையிலே கிள்ளி விட்டுருக்க வேண்டும். எல்லாமும் அனுபவம்தானே.

அயல் மகரந்த சேர்க்கை Read More »

கருப்பு கோலம் நான்

உனது மார்கழி மாத வாசலில்  எத்தனையோ கோலங்கள் வந்து, அழிந்து போயிருக்கலாம்;  கர்வமாய் சொல்வேன்; “உனது கோலகுறிப்பேட்டில்  முற்று பெறாத, வண்ணமிட முடியாத, விலக்கி வைக்கப்பட்ட,  கருப்பு கோலம் நான்”.

கருப்பு கோலம் நான் Read More »