100 நாள்வேலைவாய்ப்புதிட்டம்: கைவிடப்படுகிறதா? மாற்றம் செய்யப்படுகிறதா? தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதா?

முதலில் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

  • இந்த திட்டம் திரு டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் முதன்முறையாக பிரதமர் பதவியை வகித்த காலத்தில் அதாவது 05. 09.2005 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு பிரிவு 41ன் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த பிரிவு, குடிமக்கள் வேலை செய்யும் உரிமையை நிலைநாட்டுகிறது.
  • மேலும் 13 மாத திட்டமிடலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதலுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
  • இதனுடைய செலவீனமானது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே 90:10 என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.
  • செய்ய வேண்டிய வேலைகளை கிராம சபைகளே முடிவு செய்து கொள்ளலாம் அதற்காக 73 வது இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் வழிகோலியது.
  • இந்த திட்டமானது கோவிட் 19 தொற்றுக்காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.
  • இந்த திட்டத்திற்காக திட்ட மதிப்பீடு என்பது எப்பொழுது வேண்டுமானாலும் உயர்த்தும் நிலையில் இருந்தது.
google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0
  • இந்தத் திட்டத்தால் உழவு சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவியது.
  • இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் தரம் இல்லாதவைகளாகவும்; நீண்ட தொலைநோக்கு பார்வைகள் இல்லாமலும் தின கூலிக்காக செய்கின்ற வேலையாக இருந்தது.
  • இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளில் வெளிபடை தன்மை  இல்லாமலும், ஊழலும், கண்காணிப்பும் குறைவாகவே இருந்தன.
  • இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு சேர வேண்டிய ஊதியம் தாமதமாக போய் சேர்ந்தது

புதியதிட்டம்திட்டத்தின்கூறுகள்:

  • இத்திட்டமானது வேலை வாய்ப்பின் நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது.
  • பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது; அதாவது மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த திட்டத்தின் மூலம் கீழ்காணும் நான்கு பகுதிகள் மட்டும் கவனம் செலுத்தக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. (1) தண்ணீர் பாதுகாப்பு (2) முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, (3).வாழ்வாதாரத்திற்கான உள்கட்டமைப்பு (4) தீவிர வானிலை தணிப்பு 
  • செலவினமானது மத்திய மாநிலங்களுக்கு இடையே 60 : 40 என்ற விகிதத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • செய்ய வேண்டிய வேலைகளை கிராம சபைகள் மற்றும் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அமைப்புடன் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.
  • உச்ச விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் 60 நாட்கள் வரை திட்டத்தை நிறுத்தி வைக்கலாம்.
  • வேலையானது செயற்கை நுண்ணறிவின் மூலம் கண்காணிக்கப்பட்டு சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

எதிர்மறைகூறுகள்:

  • இதனால் மாநிலங்களுக்கு நிதி இழுப்பு ஏற்படும்.
  • வேலைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்ட நிலையில்,  நிதி ஒதுக்கி அதற்கேற்ப வேலைகளை செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம்; அதனால் ஒருவருக்கு 125 நாட்கள் பணி என்பது கேள்விக்குறியாகிவிடும். 
  • பணிகளை கிராம சபைகள் மட்டுமே தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு மேல் ஒரு அமைப்பை உருவாக்கி; முடிவெடுக்கும் அதிகாரத்தை பரவலாக்காமல், மீண்டும் அதிகார குவிப்பை நோக்கி செல்கிறது.
  • தமிழ்நாட்டின் நிதி பங்களிப்பு 10% இருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கும்.
  • ஜிஎஸ்டி வரிப்பகிரவு போதுமான அளவில் ஒதுக்கப்படவில்லை என தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இது மேலும் நிதி இழப்பை மாநிலத்திற்கு அதிகரிக்கும்.
  • 60 நாட்கள் நீங்கலாக பத்து மாதங்களில் 125 நாட்களை பிரித்தால், ஒரு மாதத்திற்கு எனக்கு கணக்கிட்டாலும் 12.5 நாட்கள் வருகிறது. இந்த நாட்கள் போடுமனதாக இருக்காது.  
  • மேலும், சிறு குறு தொழிற்சாலைகள் நிறைத்த தமிழகத்தில் பெரும்பாலான உழைக்கும் 25 முதல் 50 வயது உள்ள பெண்கள், மாத சம்பளத்திற்கு பணியாற்றுகிறார்கள் இதனால் இந்த திட்டம் கிராமப்புறங்களில் மட்டுமே செயல்படுத்த சாத்தியக்கூறுகள் அதிகம்; பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்.
  • வேலையில்லாத 60 நாட்களில், தொழிலாளர்கள் பணிக்கேற்ப ஊதியம் பெற முடியாமல் முதலாளிகள் கொடுத்ததை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமை இருக்கும்.

1 thought on “100 நாள்வேலைவாய்ப்புதிட்டம்: கைவிடப்படுகிறதா? மாற்றம் செய்யப்படுகிறதா? தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதா?”

  1. சூர்யா. V

    Good afternoon sir.
    இந்த திட்டம் பற்றிய முழு தகவல் கிடைத்தது நன்றி
    திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது ( மக்கள்) சார்
    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது
    நன்றி சார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *