மத்திய அரசு ஆனது கடந்த டிசம்பர் 16ஆம் நாள் 100 நாள் வேலைத்திட்டம் அதாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து தீக்ஷித் பாரத் கேலரி ஃபார் ரோஸ் கார் அண்ட் எச்விகா மிஷன் கிராமின் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பை காட்டி இருக்கின்றன. மேலும் இதில் உள்ள மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதால், பாஜக ஆளாத மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது எனவும் மக்களை திரட்டி போராட்டத்தின் மூலம் இச்சட்டம் திரும்ப பெற வைக்க முடியும் என முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இவ்வளவு எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில் இந்தத் திட்டம் எப்படி இருக்கிறது? இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு ஏதாவது பயன் உண்டா? என அலசலாம்
முதலில் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
- இந்த திட்டம் திரு டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் முதன்முறையாக பிரதமர் பதவியை வகித்த காலத்தில் அதாவது 05. 09.2005 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு பிரிவு 41ன் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த பிரிவு, குடிமக்கள் வேலை செய்யும் உரிமையை நிலைநாட்டுகிறது.
- மேலும் 13 மாத திட்டமிடலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதலுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
- இதனுடைய செலவீனமானது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே 90:10 என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.
- செய்ய வேண்டிய வேலைகளை கிராம சபைகளே முடிவு செய்து கொள்ளலாம் அதற்காக 73 வது இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் வழிகோலியது.
- இந்த திட்டமானது கோவிட் 19 தொற்றுக்காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.
- இந்த திட்டத்திற்காக திட்ட மதிப்பீடு என்பது எப்பொழுது வேண்டுமானாலும் உயர்த்தும் நிலையில் இருந்தது.
எதிர்மறைகருத்துக்கள்:
- இந்தத் திட்டத்தால் உழவு சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவியது.
- இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் தரம் இல்லாதவைகளாகவும்; நீண்ட தொலைநோக்கு பார்வைகள் இல்லாமலும் தின கூலிக்காக செய்கின்ற வேலையாக இருந்தது.
- இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளில் வெளிபடை தன்மை இல்லாமலும், ஊழலும், கண்காணிப்பும் குறைவாகவே இருந்தன.
- இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு சேர வேண்டிய ஊதியம் தாமதமாக போய் சேர்ந்தது
புதியதிட்டம்திட்டத்தின்கூறுகள்:
- இத்திட்டமானது வேலை வாய்ப்பின் நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது.
- பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது; அதாவது மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.
- இந்த திட்டத்தின் மூலம் கீழ்காணும் நான்கு பகுதிகள் மட்டும் கவனம் செலுத்தக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. (1) தண்ணீர் பாதுகாப்பு (2) முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, (3).வாழ்வாதாரத்திற்கான உள்கட்டமைப்பு (4) தீவிர வானிலை தணிப்பு
- செலவினமானது மத்திய மாநிலங்களுக்கு இடையே 60 : 40 என்ற விகிதத்தில் பகிரப்பட்டுள்ளது.
- செய்ய வேண்டிய வேலைகளை கிராம சபைகள் மற்றும் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அமைப்புடன் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.
- உச்ச விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் 60 நாட்கள் வரை திட்டத்தை நிறுத்தி வைக்கலாம்.
- வேலையானது செயற்கை நுண்ணறிவின் மூலம் கண்காணிக்கப்பட்டு சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
எதிர்மறைகூறுகள்:
- இதனால் மாநிலங்களுக்கு நிதி இழுப்பு ஏற்படும்.
- வேலைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்ட நிலையில், நிதி ஒதுக்கி அதற்கேற்ப வேலைகளை செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம்; அதனால் ஒருவருக்கு 125 நாட்கள் பணி என்பது கேள்விக்குறியாகிவிடும்.
- பணிகளை கிராம சபைகள் மட்டுமே தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு மேல் ஒரு அமைப்பை உருவாக்கி; முடிவெடுக்கும் அதிகாரத்தை பரவலாக்காமல், மீண்டும் அதிகார குவிப்பை நோக்கி செல்கிறது.
தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதா?
- தமிழ்நாட்டின் நிதி பங்களிப்பு 10% இருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கும்.
- ஜிஎஸ்டி வரிப்பகிரவு போதுமான அளவில் ஒதுக்கப்படவில்லை என தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இது மேலும் நிதி இழப்பை மாநிலத்திற்கு அதிகரிக்கும்.
- 60 நாட்கள் நீங்கலாக பத்து மாதங்களில் 125 நாட்களை பிரித்தால், ஒரு மாதத்திற்கு எனக்கு கணக்கிட்டாலும் 12.5 நாட்கள் வருகிறது. இந்த நாட்கள் போடுமனதாக இருக்காது.
- மேலும், சிறு குறு தொழிற்சாலைகள் நிறைத்த தமிழகத்தில் பெரும்பாலான உழைக்கும் 25 முதல் 50 வயது உள்ள பெண்கள், மாத சம்பளத்திற்கு பணியாற்றுகிறார்கள் இதனால் இந்த திட்டம் கிராமப்புறங்களில் மட்டுமே செயல்படுத்த சாத்தியக்கூறுகள் அதிகம்; பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்.
- வேலையில்லாத 60 நாட்களில், தொழிலாளர்கள் பணிக்கேற்ப ஊதியம் பெற முடியாமல் முதலாளிகள் கொடுத்ததை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமை இருக்கும்.
Good afternoon sir.
இந்த திட்டம் பற்றிய முழு தகவல் கிடைத்தது நன்றி
திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது ( மக்கள்) சார்
நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது
நன்றி சார்.