நீதிபதிகளைபதவிநீக்கம்செய்யும்வழிமுறைகள்

படி:1

ஒரு நீதிபதியின் மீது ஏதாவது குறைகள் இருந்தால் இந்திய மக்களவை (அ) மாநிலங்களவை உறுப்பினர்கள் அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி,  மக்களவையில் 100 உறுப்பினர்கள் குறையாமலும் (அ)  மேலவையில் 50 எம்பிக்கள் குறையாமலும் தனது கையெழுத்து இட்டு, மக்களவையாக இருந்தால் சபாநாயகர் இடம் அல்லது மேலவையாக இருந்தால் துணை ஜனாதிபதியிடமும் இந்த தீர்மானத்தை அளிக்க வேண்டும்; இது முதலாவது வழிமுறையாகும்.

படி:2 

google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0

மக்களவை உறுப்பினர்களோ அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை சபாநாயகர் அல்லது துணை ஜனாதிபதியோ ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஒரு மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பார்கள். இந்த குழுவானது நீதிபதிகள் சட்டம் (விசாரணை) 1968 படி அமைக்கப்படுகிறது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஏதாவது ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் மற்றும் ஒரு புகழ் பெற்ற சட்ட நிபுணர் அல்லது பதவி ஓய்வு பெற்ற நீதிபதியோ குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழு ஆராய்ந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளுக்கு ஒரு அவர்களின் தரப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பிலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த குழுவானது பாராளுமன்றத்திற்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்யும்.

படி3:

இந்த மூன்று பேர் கொண்ட குழுவால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த விசாரணை அறிக்கை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்களித்தால், அந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக கருதப்பட்டு, அது அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 

படி 4:

இந்த தீர்மானம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வெற்றி அடைந்தால், இது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி அவர்கள் இதன் மீது நடவடிக்கை எடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி பதவி நீக்கம் செய்வதற்கான ஆணையிடுவார். 


இந்தியாவில் பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்ட நீதிபதிகள்:

1.நீதிபதி வி ராமசாமி:

 1993ஆம் வருடம் இவர் மீது நிதி முறைகேடில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய போது இவர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக 1993 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து இவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் இதனை காங்கிரஸ் கட்சியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சேர்ந்து முறியடித்தன. இதுதான் முதல் பதவி நீக்கம் செய்ய ஒரு நீதிபதியின் மீது எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.

2. நீதிபதி சௌமித்ரா சென்:  

இவர் மீது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தீர்மானம் மேலவையில் கொண்டுவரப்பட்டது. இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பதவி வகித்தபோது, அரசுக்கு சேர வேண்டிய தொகையை தன்னுடைய தனிப்பட்ட வங்கி கணக்கு மாற்றி வைத்திருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே இவர் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்ததால், இவர் பதவி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து தப்பினார்.

3. நீதிபதி எஸ் கே கங்குலி:

 இவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தனக்கு கீழே இருந்த பெண் நீதிபதியிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் இவர் மீது பதவி நீக்கம் செய்ய மேலவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

4. நீதிபதி சிவி நாகர்ஜுன ரெட்டி:

இவர் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில், 2017 ஆம் ஆண்டு வேலை செய்த போது, இவர் மீது சாதிய ரீதியிலான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இவர் தனக்கு கீழ் இருந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் மேலவையில் இவர் மீது இரண்டு முறை தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது. முதல் முறை கொடுக்கப்பட்டு அது போதுமான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் திரும்பப் பெறப்பட்டது. இரண்டாவது முறையும் தீர்மானம் இவர் மீது கொடுக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *