வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல்


வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தி அந்த நாட்டினுடைய அதிபர் நிக்கோலஸ் அவரது மனைவியும்  சிறை பிடித்து, நாட்டை விட்டு வெளியேற்றி, அமெரிக்காவுக்கு கொண்டு போய் இருக்கிறதாக  சமூக வலைதளங்களில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம்? ஏன் அமெரிக்கா ஒரு நாட்டை தாக்கியதோடு மட்டுமில்லாமல், நாட்டோட அதிபரை கைது செய்து நாட்டை விட்டு, நாடு கடத்துவதாக அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? என்பதைதான் தான் இந்த வீடியோவில் நாம் இப்போது பார்க்க போறோம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதை பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும்; அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் ஏராளமாக நுழைவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக அவர் கடந்த வருடம் வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அதிபர் நிக்கோலஸ் போதை பொருள் வர்த்தகத்தில் “எனக்கு எந்த பங்கும் இல்லை; வெனிசுலாவில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால் ,ஆட்சியில் இருந்து என்னை அகற்றி அந்த வளத்தை அபகரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் முயற்சிக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரிபீயன் கடற்ப்பகுதியிலும், பசிபிக் கடற்ப்பகுதியிலும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு, போதை பொருள் கடத்தப்படுவதாக கருதப்படும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் வெனிசுலாவின் கடற்கயோரம் இருக்கும் நகரங்களில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக சொல்லி அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0

இந்த நிலையில்தான், வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மீது அமெரிக்கா விமானங்கள் இரண்டாம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த நகரத்தின்

 பல கட்டிடங்கள் தீப்பிடித்து எறிந்தன; மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் வெனிசுலாவின் மற்ற நகரங்களான மிராண்டா, ஆராகுவா மற்றும் லா குவைரா ஆகிய மாகாணங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பெனிசிலாவின் அதிபர் நிக்கோலஸ் அவர்கள் அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை தோற்கடிக்க பொதுமக்கள் அணி திரள வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதுபோன்ற தாக்குதல்கள் நடத்துவது அமெரிக்காவுக்கு ஒன்றும் புதிதல்ல; ஏனெனில் 1989 ஆம் ஆண்டு டிசம்பரில் பணமா நாட்டின் அதிபரை போதைப்பொருள் கடத்துவதாக குற்றம் சாட்டி, அந்த நாட்டையும் தாக்கி அதிபரை பதவி நீக்கம் செய்து வேறு ஒருவரை அதிபராக நியமித்தது அமெரிக்க அரசு.

வெனிசுலாவின் அதிபர் திரு.நிக்கோலஸ் அவர்கள் நவம்பர் 23 1963 ல்  பிறந்தவர். இவர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதியாக இருந்து, அதன் பிறகு மந்திரியாகவும் பணியாற்றி, பிறகு வெளியேறவுத் துறை மந்திரியாக உயர்ந்தார். இவருக்கு முன்னாள் இருந்த அதிபர் ஹியூகோ சாவாஸ் இறந்த பிறகு நாட்டின் அதிபராக பதவி ஏற்று கொள்கிறார். இவரது காலத்தில் வேலையில்லா திண்டாட்டம்,  விலைவாசியேற்றம் காரணமாக இரண்டு முறை புரட்சி வெடித்தது. வெனிசுலாவில், மேலும் சட்டத்தை வளைத்து தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அந்த நாட்டின் அதிபராக இவர் இருந்து வருகிறார். மேலும் இவருக்கும் அமெரிக்காவுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம் தான். அதனால் தான் இவர் அதிபர் ஆனது முதல் அமெரிக்கா இவர் மீது போதைப்பொருள் தீவிரவாதி என இவர் மீதும், இவரது மனைவி மீதும் குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இருந்த உறவு மேலும் மோசமடைந்ததால்  2019 ஆம் ஆண்டு வெனிசுலாவில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.

தனது நாட்டின் அதிபரை தாக்கி கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றிய அமெரிக்கா மீது இன்றளவும் போர் நடவடிக்கை மேற்கொள்ள மாட்டோம் என்று வெனிசுலா கூறி இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு வெனிசுலா பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத நாடு என்பதை நமக்கு தெளிவாக கூறியிருக்கிறது. மேலும் வெனிசுலா போதைப்பொருள் உற்பத்தி செய்வதில் முதன்மையான நாடு இல்லை என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த நிலையில் வெனிசுலாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அதிபரை கைது செய்து இருப்பதன் பின்னணிக்கான காரணம் என்ன?

(அ) அதிபர் ஜேம்ஸ் மன்ரோ கொள்கை-1823:

1823 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜேம்ஸ் மன்ரோ அவர்கள் ஒரு கொள்கையை வகுத்துக் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க கண்டத்தில் சில நாடுகளை கைப்பற்றி, ஏகாதிபத்தியம்  செய்து கொண்டிருந்தன. முக்கியமாக பிரான்ஸ் நாடு தெற்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய நிறைய நாடுகளை ஆக்கிரமித்து காலணி ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவின் நாடுகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுவிடும் என்ற ஒரு பயத்தினால் அமெரிக்க அதிபர் அவர்கள் “எங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாதவரை உங்களின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எந்த விதத்திலும் எதிர்க்காது” என்று ஒரு கொள்கையை ஏற்படுத்தின்னர். ஏனெனில் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிடம் சக்தி வாய்ந்த கடற்படை கிடையாது; அதனால் கரிபீயன் கடல் பகுதியோ அல்லது பசுபிக் கடல் பகுதியோ கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் இந்த கொள்கை ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கொள்கையை இப்பொழுது ட்ரம்ப் அவர்கள் புதுப்பித்து தென் அமெரிக்க நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த ஆரம்பித்திருக்கிறார். 

(ஆ) சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம்: 

மேலும் தென்னாப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில், இரண்டு நாடுகள் மட்டுமே அமெரிக்காவுக்கு இன்றளவும் அடிபணியாத நாடுகள்; ஒன்று கியூபா மற்றொன்று வெனிசுலா. இந்த இரண்டு நாடுகளில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. மீதி உள்ள நாடுகளில் அனைத்தும் ஜனநாயக கட்சிகளே அதாவது வலதுசாரி கட்சிகளே ஆட்சியில் உள்ளது. இந்த நாடுகளெல்லாம் அமெரிக்காவின் பின்புலத்தால் இயக்கப்படுகிறது. இதுவே அமெரிக்காவுக்கு பெரிய அச்சுறுத்தல்தான். ஏனெனில் வெனிசுலா நாடு சீனாவுடனும், ரஷ்யாவுடனும் பெரிய அளவிலான பொருளாதார உறவை கொண்டிருந்தது. சீனா தனது பழைய பண்டைய கால பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் தென் அமெரிக்காவின் அனேக நாடுகளை தனது பொருளாதார முதலீடுகளில் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது. மேலும் சீனா, வெனிசுலாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய நோக்கம், வெனிசுலாவில் இருக்கும் எண்ணெய் வளம். ஏனெனில் வெனிசுலாவிலிருந்து 80 சதவீதம் எண்ணையை சீனா வாங்கிக் கொள்கிறது. மேலும் அமெரிக்கா, வெனிசுலாவின் மீது பொருளாதார தடை விதித்த பிறகும் அந்த நாட்டில் 1 பில்லியன் அளவிற்கு வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனங்களில் சீனா முதலீடு செய்து இருக்கிறது. இதனால் பனாமாவை, அமெரிக்கா மிரட்டி 2025 ஆம் ஆண்டு பழைய பட்டுப்பாதை திட்டத்தில் இருந்து வெளியேற வைத்தது. வெனிசுலாவின் மீது நடந்த இந்த தாக்குதல், இந்த கண்டத்தில் இருக்கும் மற்ற பலவீனமான நாடுகளுக்கு சீனா மற்றும் ரஷ்யாவிடம் சேராமலிருக்க விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. 

(இ) எண்ணெய் வளம்:

உலக எண்ணெய் வளத்தில் வெனிசுலா 17% அல்லது அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாக கொண்டிருக்கிறது. 1976க்கு முன்னர் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் எண்ணெய் வளத்தை சுரண்டி கொண்டிருந்தன. 1976க்கு பிறகு வெனிசலாவின் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. மேலம், 1999ம் ஆண்டு  கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு அதிலிருந்து வரும் லாபத்தின் மூலம் மக்களின் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டு அமெரிக்காவின் பின்புலத்தால் புரட்சி வெடித்தது. இருந்தாலும் 48 மணி நேரத்தில் திரும்பவும் ஹியூகோ சாவாஸ் அவர்கள் அதிபர் ஆனார். இப்பொழுது புதிதாக பதவியேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் எங்களிடமிருந்து திருடிய எண்ணெய் மற்றும்  சொத்துக்களை திரும்ப ஒப்படையுங்கள் என்று பகிரங்ககமாக மிரட்டல் விடுத்தார். இதன் மூலம் அவர் அமெரிக்க நிறுவனங்கள் வளைகுடா நாட்களிலும் இருந்து என்னை பெறுவதை குறைக்கவும்  சீனாவின்  ஆதிக்கத்தை வெனிசுலாவில் ஒடுக்கவும் முயன்று இருக்கிறார். 

மக்களின் எண்ணங்களுக்கும், நலத்திற்கும் எதிரான எந்தவொரு அரசும், மேலும் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் கொள்கையும் நெடுநாட்கள் நிலைந்திருந்ததாக வரலாறு இல்லை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *