சுதேசி இயக்கம்:
1898-ல் இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக தொடங்கியது. இதனுடன் சேர்ந்து வேலையில்லா திண்டாட்டாமும் அதிகமாகியது. எவரெல்லாம், அரசாங்க வேலையில் இருக்கிறார்களோ, அவர்கள் பசி பட்டினி இல்லாமால், நல்ல நிலையில் இருந்தார்கள். இப்பொழுது, இருக்கும் அதே அரசாங்க வேலையின் ஈர்ப்புதான் அப்போழுதும். ஏனெனில், அன்று பிரிட்டிஸ் அரசாங்காத்தின் கல்விமுறையானது, இரண்டு நோக்கங்களை கொண்டுருந்தது (1) அவர்களின் அலுவலங்களில் வேலை செய்ய, (2) குலகல்விமுறையை ஒழிக்க மற்றும் விளிம்புநிலை மக்களுக்கும் கல்வி கற்க. இதில் இரண்டாவது நோக்கம், இந்தியாவின் சிறுதொழிலை முற்றிலும் சிதைத்து,வேலையில்லா திண்டாட்டாத்தை அதிகப்படுத்தியது. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வும் அதிகமாகி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டாமும் தீவிரமானது.
இந்த நிலையில், 20, ஜுலை 1905-ம் ஆண்டு, பிரித்தாலும் கொள்கையின் கீழ், கர்சன் துரை அவர்கள் பெங்கால் மாநிலத்தை இரண்டாக பிரித்து உத்தரவிட்டார். இதன்மூலம், மக்கள் மத்தியில் இருக்ககூடிய ஒற்றுமையை, குறிப்பாக இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கவும் திட்டமிடபட்டது. பெங்காலை பிரிப்பதற்க்கு எதிரான இயக்கமானது 7 ஆகஸ்ட் 1905-ம் மாதம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கமானது, பெங்கால் பிரிப்பை நடைமுறைப்படித்திய 16 அக்டோபர் 1905 நாள், ஒரு போராட்டாத்திற்கும், உண்ணாவிரதத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக, வெறுங்கால்களுடன் நடந்து கங்கையில் நீராடி, ரவீந்திர நாத் தாகூரால் இயற்றப்பட்ட ‘அமர் சொனார் பங்கலா’ பாடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பாடலானாது, பங்காளாதேக்ஷ் சுதந்திரத்திற்கு பிறகு, 1971ம் ஆண்டு அவர்களால் அவர்களின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இது மாதிரியான போரட்டமானது, எதிர்பார்த்த விளைவுகளை ஆட்சியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. மக்கள் மத்தியில் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அவர்களின் உணர்வுகளை மேலும் தூண்டவும் முடிவு செய்து அதற்கான போராட்டத்தை கடைப்பிடிக்க ஆராய்ந்தனர். அதற்கான முடிவுதான் சுதேசி மற்றும் புறக்கணிப்பும். மக்கள் அந்நியப்பொருட்களை பயன்படுத்த மறுத்தும், எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம்தான் இன்றைய ‘Made in india’ திட்டத்தின் அடிப்படை. இந்த போராட்டமானது, மற்ற மாநிலங்களான பம்பாய் மற்றும் சென்னைக்கும் பரவியது.
காந்தியும் ரத்னமும்:
1921-ம் ஆண்டுவாக்கில், இராஜமந்திரியை சேர்ந்த நகைவியாபாரி கே.வி.ரத்னம் அவர்கள் மாகத்மா காந்திக்கு சில கலைப்பொருட்களை பரிசாக அளித்தார். அதைப்பார்த்து காந்திஜி அவர்கள், ஏன் நீங்கள் மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்க கூடாது? என்றார். காந்திஜி கொடுத்த ஊக்கத்தினால், கே.வி.ரத்னம் அவர்கள் எழுதுகோல் (பென்) செய்ய முடிவெடுத்து, 1932-ம் ஆண்டு ‘ரத்னம் பென் வொர்க்ஸ்” என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்து தயாரிக்க ஆரம்பித்தனர். 1933-ம் ஆண்டு, முதல் எழுதுகோலை காந்திஜிக்கு அனுப்பி வைத்தனர். அதனை காந்திஜி அவர்கள் பார்த்துவிட்டு, இதனுடன் அந்நியப்பொருட்கள் கலந்து இருப்பதால் அதனை நிராகரித்துவிட்டார். மீண்டும், சில வருடங்கள் அதனை புதிய முறையில், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு செய்து முடித்தார் ரத்னம். அந்த புதிய எழுதுகோலானது, காந்திஜியிடம், 16 ஜுலை 1935-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதனை உபயோகப்படுத்திய பிறகு, காந்தி அவர்கள் ரத்னம் அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார், ‘பிரியமுள்ள ரத்னம் அவர்களுக்கு, நீங்கள் கொடுத்தனுப்பிய எழுதுகோல் வந்தடைந்தது. மேலும், எனக்கு சில எழுதுகோல் தேவைப்படுகிறது. உங்களின் எழுதுகோலானது, கடைகளில் கிடைக்கும் அந்நியப் பொருட்களுக்கு மாற்றாக இருக்கிறது’.
மேலும், உள்ளூர் துணை நீதிபதியான எம்.கிருக்ஷ்ணாமாச்சாரி அவர்கள், அந்நிய எழுதுகோலை உபயோகிக்கும் பழக்கம் உடையவர். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை இருந்ததால், நடுக்கத்தின் காரணமாக, அவர் உபயோகித்த அந்நிய எழதுகோலின் முனையானது அடிக்கடி உடைந்துவிடும். அவரிடம், ரத்னம் அவர்களின், எழுதுகோலை கொடுத்து உபயோகப்படுத்த சொன்னார்கள். விருப்பமின்றி, உபயோகப்படுத்திவருக்கு அதன் தரம் பிடித்துபோய் விட்டது. மேலும், நடுக்கத்தினால் உடைந்துபோகும் முனையனாது உடனடியாக சரிசெய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. இதனால், நீதிபதி அவர்கள், ரத்னம் எழுதுகோலின் ரசிகனாக மாறிப்போய்விட்டார்.
ரத்னம் எழுதுகோலை, நமது குடியரசு தலைவர்களும், பிரதமர்களும், பல வெளிநாட்டு அதிபர்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றைய பிரதமரும் இந்த எழுதுகோலை பயன்படுத்தி வருகிறார். இன்று, ரத்னம் அவர்களின் மகனான கே.வி.ரமணாமூர்த்தி அவர்கள் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்பொழுது இந்நிறுவனமானது, உலகின் பெரிய மற்றும் சிறிய எழுதுகோலை தயாரித்து ‘கின்னஸ்’ பதிவில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த ஜெர்மனி அதிபருக்கு, புதிதாக உதயமான லே யூனியன் பிரதேசத்தின் சால்வையும், ரத்னம் நிறுவனத்தின் எழுதுகோலும் பரிசளிக்கப்பட்டது. இந்த எழுதுகோல் முற்றிலும் கைகளால் மட்டுமே தயாரித்து முடிக்க இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் தெரியும் ரத்னம் எழுதுகோலின் முக்கியத்துவம்.
தகராறும் & வரலாறும்:
இந்த பதிவை எழுதுவதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கிறது. (1) வடிவேல் சொல்லுவதைபோல், தகராறு தான் வரலாறு. அதன் மூலம் நிகழும் விளைவும். (2) கடந்த ஒரு மாதங்களில் மட்டும், எனது மகளுக்கு நான் வாங்கி கொடுத்த இங்க் பென்களின் எண்ணிக்கை நான்கு. அதனுடம் சேர்ந்து இருக்கும் சிறு இங்க் குப்பிகள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் வகையில் இருக்கும் சீனாவின் தாயரிப்புகள். இதையெல்லாம் கவனிக்கும்பொழுது, நாம் அனுபவித்த எழுதுகோல் சம்பந்தமான பழக்கமுறைகள் நினைவுக்கு வந்தன. புதிய எழுதுகோல் வாங்கியதும், அதன் முனையானது கீறாமல் எழுத கண்ணாடியில் எழுதுவதும்; 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, ஆறு மாதம் முன்னரே தயார்ப்படுத்தும் எழுதுகோல்; நெருங்கிய நண்பனே கேட்டாலும் திரும்பவும் சரியாக எழுதாது என்பதாலும் கொடுக்காத எழுதுகோல். நம்மை போன்று தேர்வு முடிந்து, இங்க் வீசி விளையாடும் பழக்கம், இன்று இருக்கிறாதா? என தெரியவில்லை. மேலும் இங்க் பாட்டீல்களும், இங்க் ப்பில்லர்களும் காணாமல் போய்விட்டன. அவசரத்தில், இங்க் ஊற்றி வெள்ளை சட்டையை அழுக்காக்கி, அம்மாவிடம் திட்டு வாங்கிய திங்கள் கிழமைகள்.
இதெல்லாம் அனுபவிக்கவெண்டுமெனில், மீண்டும் சுதேசிக்கு திரும்புங்கள். சீனாவின் தாயரிப்புகளை நிராகரியுங்கள்.
http://ratnampens.blogspot.com
எனது எழுத்துக்கள் பிடிக்குமெனில், கருத்துக்களை பதிவிடுங்கள். இது மேலும் என்னை ஊக்கப்படுத்தும்.
வணக்கம் சார்.
ஜெர்மன் அதிபருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் பற்றிய தகவல் புதிதாக நான் அறிந்துகொண்டது.
மக்கள் அனைவரும் இந்தியாபொருட்களை பயன்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும் சார்.
தேர்வு முடிந்ததும் இங்க் வீசி விளையாடிய கடைசி தலைமுறை நாங்கள். நன்றி.