- இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடரானது கடும் நெருக்கடிக்கு மத்தியில் தொடங்கியது.
- பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது இந்திய ரசிகர்கள் மிகவும் கோபமான சூழ்நிலையில் இருந்தனர். ஏனெனில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியானது இந்திய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து இருந்தது. அது அவர்கள் “டெஸ்ட் உலக சாம்பியன்: என நிரூபித்து இருந்தது.
ரோகோ பலம்:
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பும், பயிற்சியாளர் கம்பீரும் புதிய வீரர்கள் கொண்ட அணியை கட்டமைப்பதில் தீவிரம் செலுத்தியதன் விளைவாக மூத்த வீரர்கள் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.
- இதில் ரோகித் சர்மாவும், விராட் கோலி மட்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட அதுவும் 2027 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை வரை விளையாட ஆர்வமாக இருந்தனர்.
- ஆனால் பயிற்சியாளர் இந்த இருவரின் விருப்பத்திற்கு ஆர்வம் காட்டவில்லை; மாறாக இளம் வீரர்கள் நிறைந்த அணி உள்ளூரில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முற்றிலுமாக தோற்று தொடரை இழந்த நிலையில், வாரியம் மற்றும் பயிற்சியாளர் இருவரின் கவனமும் ரோகோ கூட்டணியினர் மீது பதிந்தது. ஒருவேளை இந்த தொடரில் ரோகோ கூட்டணி சரியாக விளையாடாமல் போனால் அவர்களை கழட்டி விடவும் முடிவு செய்யப்பட்டது; ஆனால் நடந்ததோ வேறு.
தொடரின் அலசல்:
- இந்திய அணியில் அனுபவம் மிக்க வந்து வீச்சாளர்கள் இல்லை என்பதை முதல் 2 போட்டியுமே உறுதிப்படுத்தியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா எடுத்த 349 ரன் கணக்கை கிட்டத்தட்ட தொட்டுவிடும் தூரத்தில் இருந்தது தென்னாப்பிரிக்கா அணி. அதுவும் கடைநிலை வீரர்கள் விளையாடியது ஆச்சரியப்படுத்தியது. இந்த போட்டியிலும் மூத்த வீரர்கள் ரோஹித் (57) கோலி(135) மற்றும் ராகுல் (60) பங்களிப்பால் நடந்தது.
- இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் கோலி (102) மற்றும் ராகுல் (66) முக்கியமாக பங்களித்தனர். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி இந்தியா நிர்ணயித்த 358 ரன்னை எளிதாக எட்டிப் பிடித்தது.
- மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மூத்த வீரர்கள் ரோகித் (75), கோலி (65) அவர்களின் பங்களிப்பால் இந்திய அணி 270 ரன்னை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. இந்த ஒரு போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மெச்சு படி இருந்தது. அதற்கு 20 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா டாஸ் வென்றது ஒரு காரணமாகவும் இருந்தது.
- இந்த தொடரில் இந்திய இளம் தொடக்க வீரர் ஜெய்சுவால் முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் பொறுமை இல்லாமல் ஆடியதன் காரணமாக முதலிலேயே விக்கெட் இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டதும் இந்திய அணி தோல்வியுறுவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
- சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் வெற்றிடம் நன்றாகவே புலப்பட்டது.
கே எல் ராகுல்:
இந்த தொடருக்கு சுப்மன் கில்காயம் காரணமாக, கேஎல் ராகுல் அவர்கள் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த போட்டி தொடரில் அவர் தலைமை பண்பு விராட் கோலியும் தோனியும் கலந்த கலவையாக இருந்தது என்று விமர்சனகளால் பாராட்டப்பட்டார். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து இன்று ஏழாவது எட்டாவது நிலையிலும் ஆடக்கூடிய அளவுக்கு நல்ல பக்குவத்தை ராகுல் பெற்றிருக்கிறார். எனவே அவருக்கு கேப்டனுக்காண தகுதிகள் அனைத்தும் இருக்கிறது என்பதை இந்த தொடரின் வெற்றியின் மூலம் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தீர்வு:
இருபது ஓவர் போட்டிகள் போல் எல்லா பந்துகளையும் எல்லை கோட்டுக்கு விரட்டுகின்ற பலமும் தேவையும் இல்லாத போட்டி என்பது இந்த ஒரு நாள் போட்டி; இதற்கு விவேகமும், சரியான திட்டமிடலும் வேண்டும். இது போன்ற போட்டிகளுக்கு திறமையான மூத்த வீரர்களின் அனுபவமும் மற்றும் பொறுப்புணர்ந்து ஆட கூடிய இளம் வீரர்களின் கூட்டு முயற்சியே தேவை. எனவே அதற்கு ஏற்றார் போல் அணியை கட்டமைக்க வேண்டும். இதன் மூலம், இளம் வீரர்கள் மூத்த வீரர்களிடமிருந்து, அனுபவத்தையும், நுணுக்கங்களையும் ஆட்டத்தில் கற்றுக்கொண்டு தேவைக்கேற்றார் போல் அதை பயன்படுத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடி தருவார்கள். எனவே மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட அணி தற்போதுள்ள நிலையில் தேவை என்பதை இந்த கட்டுரை உங்களுக்கு உணர்த்தும்.